அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி? முழு விவரம் இதோ …

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

14-ந்தேதி பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 15 மற்றும் 16-ந்தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், பல உள் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் 18-ந்தேதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, இன்று முதல் 16-ந்தேதி வரை உள் தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இதேபோன்ற வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

Related News

Latest News