Monday, February 16, 2026

அடுத்த 7 ஆண்டுகளில் தங்கம் விலை என்னவாகும்? இதை தெரிஞ்சிக்காம நகை கடைக்கு போகாதீங்க!

இந்தியாவில் தங்க விலை வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளது. இதேசமயம், திருமணம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதால், நகை வாங்குபவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து வருவதோடு, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இதனால், “இப்போது நகை வாங்கலாமா, வேண்டாமா?” என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் பல தரகு நிறுவனங்கள், தங்க விலை தொடர்ந்தும் உயர்வைச் சந்திக்கும் எனவும், அடுத்த சில ஆண்டுகளில் 229 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளன. விலைச் சரிவுகள் சில நேரங்களில் ஏற்படினும், உலக பொருளாதார நிலைமைகள் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கச் செய்யும் என ஆஸ்பெக்ட் புல்லியன் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தர்ஷன் தேசாய் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,650 டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கேபிடல் லீக்கின் ராஜுல் கோத்தாரி, விரைவில் இது 3,700 முதல் 3,800 டாலர் வரை உயரும் என்றும், ஆனால் 2 முதல் 5 சதவீதம் வரை குறையவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22ம் தேதியன்று, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,360-க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,880 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில், 10 கிராம் தங்கம் ரூ.2.40 லட்சம் முதல் ரூ.3.61 லட்சம் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

சிட்டிகுரூப், 9.6 சதவீத உயர்வை எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,20,560 வரை செல்லலாம். அதேசமயம், கோல்ட்மேன் சாக்ஸ் 37 சதவீத அதிகரிப்பை கணித்துள்ளது. இதன் அடிப்படையில் விலை ரூ.1,50,700 வரை உயரும். நிபுணர்கள், அதிக அளவில் ஒரே நேரத்தில் வாங்காமல், படிப்படியாக தங்கத்தை சேமிக்க பரிந்துரைக்கின்றனர்.

Related News

Latest News