Thursday, May 29, 2025

”இனிமே நாங்க வச்சது தான் சட்டம்” மும்பை, சென்னையை ‘மிஞ்சிய’ பெங்களூரு

தொடர்ந்து 2வது ஆண்டாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, Play Offக்கு சென்றுள்ளது. கடந்தாண்டு தொடர்ச்சியாக 6 போட்டிகளிலும் வென்று, Play Off வாய்ப்பினைத் தக்க வைத்தது. இதுவரை RCBயின் இந்த சாதனையை, எந்தவொரு அணியும் Overtake செய்யவில்லை.

இந்தநிலையில் தற்போது அந்த அணி சமூக வலைதளத்தில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். முன்னதாக அதிக பாலோயர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வைத்திருந்தது.

ஆனால் தொடர்ச்சியான தோல்விகளால், சென்னை ஏராளமான பாலோயர்களை இழந்து விட்டது. தற்போது CSK இன்ஸ்டாகிராம் பக்கத்தினை 18.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியை இன்ஸ்டாகிராமில் 18 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.

தலா 5 IPL கோப்பைகளை வைத்திருக்கும் சென்னை, மும்பை அணிகளை மிஞ்சி, சமூக வலைதளத்தில் பெங்களூரு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. RCB இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்றாலும், அணியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news