Wednesday, December 24, 2025

வெங்காயம் இப்படி கருப்பா இருந்தா யூஸ் பண்ணலாமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது கடினம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகைகள் இருந்தாலும் அதிகம் தேர்வு செய்யப்படுவது பெரிய வெங்காயம்தான். ஆனால் தற்போது சந்தையில் கருப்பு கோடுகள், அழுகிய நிலையில் உள்ள வெங்காயங்கள் வருவது கவலைக்குரியது. இந்த கருமை அல்லது கருப்பு கோடுகள் ஏற்படும் காரணமும், அது எந்த வகையைச் சேர்ந்தது என்றும் அறிந்து கொள்வோம்.

வெங்காயத்தில் கருமைகளுக்கு மூலமாக இருப்பது Aspergillus என்று அழைக்கப்படும் பூஞ்சை வகை ஆகும். இது பொதுவாக மண், காய்கறிகள், பழங்கள் மற்றும் ஈரமான சூழ்நிலைகளில் உண்டாகும். இது உணவுப் பொருட்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.

மிகவும் கவனிக்க வேண்டியது என்னவெனில், இதில் உள்ள நச்சு பொருள்கள் மனித உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தாகும்.

இது சுவாசக் குழாய் நோய்கள், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. மூட்டு உள்நோய்கள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் இந்த வகை வெங்காயங்களை தவிர்க்க வேண்டும்.

எனவே, கடையில அல்லது வீட்டிலோ கருப்பு கோடுகள் மற்றும் அழுகிய வெங்காயங்களை நீங்கள் பார்த்தால் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அல்லது அந்த பகுதியை அகற்றி நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.

வெங்காயங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

வெங்காயத்தை உலர்ந்த, காற்று கொண்ட இடத்தில் வைக்கவும். பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டாம். இது ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

கருப்பு கோடுகள் தோன்றிய வெங்காயத்தை வேகமாக அகற்றவும். பாதிக்கப்பட்ட வெங்காயம் மற்ற வெங்காயங்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.

Related News

Latest News