Tuesday, June 24, 2025

‘மீண்டும்’ வன்மத்தைக் கக்கிய KKR  ‘அப்படி’ என்னதான்பா நடந்துச்சு?

இந்திய அணியின் திறமையான வீரர்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் அய்யரை, ஒருபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியு,ம் இன்னொரு பக்கம் BCCIயும் வச்சு செய்து வருகின்றன. கொல்கத்தா அணியை விட்டு வெளியேறினாலும் ஷ்ரேயாஸ் மீது KKR, இன்னும் கொலைவெறியில் தான் இருக்கிறது போல.

கடந்த 2024ம் ஆண்டு மே 26ம் தேதி தங்களின் 3வது IPL கோப்பையை, கேப்டன் ஷ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தா வென்றது. அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீருக்கும், ஷ்ரேயாஸ்க்கும் நடுவில் எதுவும் சரியில்லை. இதனால் தான் கோப்பை வென்று கொடுத்தும், ஷ்ரேயாஸ்க்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மெகா ஏலத்துக்கு வந்த ஷ்ரேயாஸை, பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கி கேப்டன் பதவி அளித்தது. கடந்த வருடம் IPL கோப்பையை வென்ற KKR இந்தாண்டு Play Offக்கு கூட செல்லவில்லை. ஆனால் அதே மே 26ம் தேதி மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்கு பிறகு, இறுதிப்போட்டிக்கு ஷ்ரேயாஸ் அழைத்து சென்றுள்ளார்.

பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் இருப்பதால், முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பஞ்சாப்பிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா ”கோப்பை வென்று 1 வருடம்” என்ற கேப்ஷனுடன், ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வன்மத்தைக் கக்கியுள்ளது.

கொல்கத்தாவின் இந்த செயலால் ரசிகர்கள் கொந்தளிக்க, பின்னர் ஷ்ரேயாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. கொல்கத்தா அணியில் இருந்தபோது கவுதம் கம்பீருக்கும், ஷ்ரேயாஸ் அய்யருக்கும் மோசமாகவே முட்டிக்கொண்டு விட்டது.

சொல்லப்போனால் ஷ்ரேயாஸ் அணியை விட்டு வெளியேறவும், கம்பீர் தான் முக்கிய காரணமாக இருந்தாராம். கம்பீர் தான் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர். இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல சராசரி வைத்திருந்தும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஷ்ரேயாஸ் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

ஷ்ரேயாஸ் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், நிச்சயம் அவர்களின் கிரிக்கெட் Carrier அத்துடன் முடிந்து போயிருக்கும். ஆனால் பீனிக்ஸ் பறவை போல சற்றும் மனம் தளராமல், தன்னுடைய ஆகச்சிறந்த பார்மை அவர் மீட்டெடுத்து இருக்கிறார். இதனால் BCCI காண்ட்ராக்டில் மீண்டும் இடம் கிடைத்தது போல, இந்திய அணியிலும் அவருக்கு  விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news