Saturday, July 19, 2025

விமான விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ விளக்கம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்வபம் நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது விமான விபத்தின் போது நடந்தது குறித்து டி.ஜி.சி.ஏ விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் பி787 விமானம் கிளம்பிய உடனே நொறுங்கி விழுந்தது. இதில் 12 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர்.

விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.

இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறது. இவ்வாறு டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news