Wednesday, December 24, 2025

சாப்பிட்ட உடனே நெஞ்செரிச்சல் வருதா? இதெல்லம் தான் காரணம்

இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கை முறையின் காரணமாக, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதனால், நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

நெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் அமிலம் அதிகமாக வெளியேறும் காரணமாக ஏற்படுகிறது. இதனை சமாளிக்க நாம் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை செய்தால், இந்த பிரச்சனையை தடுக்க முடியும். அதிகமாக நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

காஃபின்

நீங்கள் காஃபி, டீ, காபி கலந்த பானங்கள் உடன் அதிகமாக நெஞ்செரிச்சலை சந்திக்கிறீர்கள் என்றால், இவற்றை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். காஃபின் உள்ள பல பானங்களும் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சிப்ஸ், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம், கொழுப்பு, உப்பு அதிகம் இருப்பதால், அவை நெஞ்செரிச்சலுக்கு காரணமாகும். இந்த உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகமாக சாப்பிடுதல்

நீங்கள் ஏற்கனவே அமில பிரச்சனையில் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஒரே நேரத்தில் அதிக உணவு சாப்பிடாமல், சாப்பிடும் அளவை குறைத்து, சிறிது இடைவெளி எடுத்து சாப்பிடுவது நல்லது. அதிக உணவுகளை ஜீரணிக்கும் போது, நெஞ்செரிச்சல் அதிகரிக்கும்.

சாப்பிட்ட உடனே தூங்குதல்

சாப்பிட்டு உடனே தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை தவிர்க்கவும். சாப்பிட்ட பிறகு குறைந்தது 2-3 மணி நேரம் கழித்து அதன் பின்னர் தூங்க செல்லலாம்.

அதிக உடல் எடை

உடல் எடையை அதிகம் உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். உடல் பருமனுக்கான பிரச்சனையை தவிர்க்க உடற்பயிற்சி மேற்கொண்டு, உடல் எடையை கட்டுப்படுத்துவது முக்கியம்.

இதனை சரியாக பின்தொடர்ந்தால் நெஞ்செரிச்சல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் குறையும்.

Related News

Latest News