ஜூவல்லரி கடைகளுக்கு ஆப்பு… இனி ஏடிஎம்-ல்  தங்கம்

240
Advertisement

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது போல் தங்கம் வாங்குவதும் விற்பதும் செய்ய முடியாதா என்ன? டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே சாத்தியம் என நிரூபித்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம். கோல்ட்சிகா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் முதல் தங்க ஏடிஎம்-ஐ நிறுவியுள்ளது.தங்கம் வாங்குவது மட்டுமின்றி விற்பனையும் செய்யக்கூடிய இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் இதுவாகும். இந்த ஏடிஎம்கள் மூலம் தங்கம் வாங்க அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். மற்ற ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல் தங்க ஏடிஎம்கள் மூலம் தங்கத்தை எளிதாக எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் கார்டுகளையும் நிறுவனம் வழங்குகிறது.

ஒரு வருடத்திற்குள் இந்தியா முழுவதும் 3,000 தங்க ஏடிஎம்களை அமைக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் ஐந்து கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. அவை உயர்தர, BIS ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம். இந்த இயந்திரம் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை வழங்க முடியும். தங்கம் ஒவ்வொரு நாளும் சந்தை விலையில் கிடைக்கிறது. மற்ற பொருட்களைப் போலவே அனைவரும் தங்கத்தை வாங்கலாம். ஒவ்வொரு கிராம் தங்கமும் இயந்திரத்தில் காட்டப்படும். தரம், எடை மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகளைத் தவிர்ப்பதற்காக உயர்தர இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

உலகில் தங்கத்தின் இரண்டாவது பெரிய நுகர்வோர் இந்தியா. தங்கத்தின் தேவையை பொறுத்த வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் பெரும்பாலான இறக்குமதிகள் நகைத் தொழிலுக்குத்தான் நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தை சிறிய அளவில் கூட வாங்குவதை எளிதாக்கும் வகையில், கோல்டு ஏடிஎம்களை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. விரைவில் ஏகபோக வரவேற்பு கிடைக்கும் என்றும்  கோல்ட்சிகா  நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.