வைரலாகும் வழக்கறிஞரின் திருமண அழைப்பிதழ்

174
Advertisement

வழக்கறிஞர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்ஸாம் மாநிலம், கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜய் சர்மா. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கும் ஹரித்துவாரில் கல்லூரி உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றும் பூஜா சர்மாவுக்கும் 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற முடிவானது.

இதற்கான திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்துள்ளார் மணமகன் அஜய் சர்மா.

Advertisement

அந்த அழைப்பிதழில் திருமண உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின்கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஓர் அங்கமாகும். இந்த அடிப்படை உரிமையை நவம்பர் 28, 2021, ஞாயிற்றுக்கிழமை பயன்படுத்த வேண்டிய நேரமிது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பர்கள் மற்றும் சட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வழங்குவதற்காக சட்ட ஆவணம்போல் அச்சடிக்கப்பட்டுள்ள அந்தத் திருமண அழைப்பிதழில் திருமண வயதை அடைந்த இருவர் ஒன்றிணைவதை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணமகன், மணமகள் இருவரின் பெயர்களும் நீதியின் சின்னமான தராசில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ்.