பெரம்பலூர் மாவட்டம் ரெட்டிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு தண்ணீர் வசதி வேண்டும் என்றும் இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளித்தனர்.
750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் தங்கள பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை என்று ரெட்டிக்குடிக் காடு கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு நீர்த்தேக்க தொட்டி கட்டியும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது எனவே போர்கால அடிப்படையில் உடனடியாக தங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் வரும் தேர்தல் புறக்கணிக்கப்போவதாக கூறி, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.