சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு வினாடிக்கு 216 கனஅடி நீரும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 690 கனஅடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 434 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 151 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.