ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர். தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங் செய்ததாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.