நடந்து செல்லும் ஆக்டோபஸ்

427
Advertisement

ஆக்டோபஸ் நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது.

பொதுவாக, நீர்வாழ் உயிரினங்கள் நடந்துசெல்வதைக் காண்பது அரிது. சமீபத்தில் மீன் ஒன்று நடந்துசெல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதேபோல், ஆக்டோபஸ் ஒன்று கடலுக்குள் விரைவாக நடந்துசெல்வது போன்ற வீடியோ தற்போது ட்டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களில் அறிவார்ந்த உயிரினங்களில் ஒன்றான ஆக்டோபஸ் எலும்புகள் அற்றது. எலும்புகள் இல்லாததால், எந்த இடுக்கிலும் எளிதாக நுழைந்துசென்று விடும். ஆனாலும், அந்த ஆக்டோபஸ் தனது 3 கரங்களால் கடலுக்கு அடியில் தரையைத் தொட்டபடி நடந்துசெல்கிறது.

ஆக்டோபஸின் ஆயுட்காலம் 4 முதல் 5 ஆண்டுகள்வரைதான் என்று கூறப்படுகிறது. அதிலும், இனப்பெருக்கத்துக்காகப் பெண் ஆக்டோபசுடன் கூடிய சில மாதங்களிலேயே ஆண் ஆக்டோபஸ்களும், முட்டையிட்ட பின்னர் பெண் ஆக்டோபஸ்களும் இறந்துவிடுமாம்..

அதுமட்டுமன்றி, ஆக்டோபஸ் தனித்து இருக்கவே விரும்புமாம்… தண்ணீரில் நீச்சலடித்துச்சென்றால் மிகவும் சோர்வடைந்து விடுமாம்..அதனாலேயே மெதுவாக நகர்ந்து செல்லுமாம்.

அப்படியென்றால், எதற்காக இந்த ஆக்டோபஸ் விரைந்து நடக்கிறதாம்…?

மிகக்குறுகிய வாழ்நாளில் நிறைய சாதனை புரிய வேண்டும் என்னும் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்காக இருக்குமோ…?