தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கில் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு மருத்துவ வசதி, தண்ணீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் நிழலை தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சேர்கள், தார்பாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.