கோடிகளை கொட்டி விராட் கோலி வாங்கிய பிரம்மாண்ட பங்களா! வியக்க வைக்கும் வசதிகள் 

194
Advertisement

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையே பார்டர் கவாஸ்கர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஜெயித்து தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே விராட் கோலி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆலிபாக் பகுதியில் வாங்கியுள்ள பிரம்மாண்ட பங்களா கவனம் ஈர்த்துள்ளது.

Beach View உடன் 2000 சதுர அடி அளவு கொண்ட இவ்வீட்டில் நீச்சல் குளம் மட்டுமே 400 சதுர அடி அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. ஓய்வறைகள், ஆலோசனைக்கூடங்கள், விளையாட்டுப்பகுதி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த வீட்டின் விலை ஆறு கோடியாகும்.

பத்திரப்பதிவு செய்ய மட்டுமே 36 லட்சம் செலவான நிலையில், வீட்டிற்கான இன்டீரியர் டிசைன் பணிகளை ஹிரித்திக் ரோஷனின் மனைவி சூசன் கான் செய்துள்ளார்.

ஆலிபாக் நகரில் விராட் கோலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே 19 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பண்ணை வீடு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.