உலகின் தலைசிறந்த இளம் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்ட் பயிற்சிசெய்யும் வீடியோ வைரலாகியுள்ளதுடன் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
21 வயதேயான எர்லிங் கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் எந்திரமாகவே கருதப்படுகிறார். ஹாலண்டின் அற்புதமான திறமையை யாரும் கேள்வி கேட்கமுடியாதெனினும், சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோ அவருடைய திறமை பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது போருசியா டார்ட்மென்ட் நாட்டுக்காக விளையாடி வரும் அவர், இன்னும் சிறந்த வீரர் ஆக வேண்டுமென்பதையே கனவாகக் கொண்டுள்ளார். அந்தக் கனவை நிறைவேற்றும் விதமாகப் பயிற்சி எடுத்துவருகிறார். அதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சியின்போது எடுக்கப்பட வீடியோ ஒன்று வெளியாகி சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் கால்பந்து விளையாட்டில் கோல் போடுவதற்காக எர்லிங் பயிற்சிசெய்து வருகிறார். 3 கால்பந்துகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பிறகு, ஒவ்வொன்றாக அந்தப் பந்துகளை உதைக்கிறார்.
ஒவ்வொரு பந்தும் கோல் போஸ்டில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் வட்டவடிவத் தட்டைத் தொடுகிறது. இவ்வாறே 3 பந்துகளையும் உதைக்கிறார். மூன்றாவது பந்து வட்டவடிவத் தட்டின்மீது பட்டு கீழே விழுந்துவிடுகிறது.
இந்தப் பயிற்சி சிறப்பானதாக இருந்தாலும், அதன் நம்பகத்தன்மை குறித்துப் பலர் தலையைச் சொறிந்தனர். சிலர் போலியான வீடியோ என்று கூறியுள்ளனர்.
ஆனால், இந்தப் பயிற்சி வீடியோ உண்மையானது, எங்களை நம்புங்கள் என போருசியா டார்ட்மென்ட் அணி கூறியுள்ளது.
நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க