ஏன் இப்படிப் பண்றம்மா.. கருணை காட்டும்மா.. சிறுவனின் கெஞ்சல்

312
boy
Advertisement

அம்மாவிடம் தின்பண்டம் கேட்டு அடம்பிடித்து பாடலாகப் பாடும் சிறுவனின் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்துவர். அதிலும், தாய் காட்டும் அக்கறை ஈடு இணையற்றது.

குழந்தை கேட்கும் முன்பே குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானதை அறிந்து செய்துகொடுப்பார் அன்னை.
அதேசமயம் குழந்தையை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்ப்பார்.

அதற்காக, காலையில் சீக்கிரம் எழுந்தால்தான் தின்பண்டம் தருவேன், எழுந்ததும் காலைக்கடன் முடித்து முகம், கைகால் அலம்பினால்தான் தின்பண்டம் தருவேன். ஆனால், நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பார்.

அவையனைத்தும் சிறுவனின் நற்செயல், வளர்ச்சிக்கானவையாக இருக்கும். அப்படி, தாய் என்னென்ன சொல்வார் என்பதைச் சொல்லி அவையனைத்தையும் செய்விட்டதாகக்கூறி, சிறுவன் ஒருவன் தனக்குத் தின்பண்டம், காபி போன்றவற்றைக் கேட்கும் அழகைப் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்…