கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி போன்றவை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழக சுகாதாரத் துறை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.