தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் மேனேஜரும், ‘ரூட்’ (The Route) நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், அவருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த இடைத்தேர்தலில், வலுவான மற்றும் தனக்குத் தெரிந்த ஒருவரை களம் இறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கு.ப.கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவ், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் திருச்சி கிழக்கு தொகுதியில் சீட் பெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் கு.ப.கிருஷ்ணனுக்கு ஏற்கனவே வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் வெல்லமண்டி நடராஜனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சொந்த மகனையே வெற்றிபெற வைக்க முடியவில்லை என்பது குறிப்படத்தக்கது.எனவே திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய ஆதரவை தவெகவுக்கு அளித்திருப்பதால், தனது இடத்தை நிரப்ப தன்னுடைய மேனேஜருக்கு சீட் கொடுக்கவே விஜய் முடிவு செய்வார் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப ஜெகதீஷ் பழனிசாமிக்கான முக்கியத்துவத்தையும் விஜய் அதிகரித்து வருகிறார்.
