Saturday, July 5, 2025

குட்டி குழந்தையுடன் கியூட் பிக்! வைரலாகும் விஜயின் புகைப்படம்

ஷூட்டிங் பணிகள் முடிவடைந்து வாரிசு படத்தின் Post Production பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள விஜயின் புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒருசேர வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜுவின் குழந்தையை வைத்து கொண்டு விஜய் புன்னகைக்கும் இந்த photo தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்  ஆகி வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிக்கா மண்டானா மற்றும் பிரகாஷ் ராஜ், சரத் குமார், ஷியாம், பிரபு போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news