Friday, April 4, 2025

விஜய் முதலமைச்சராக வேண்டி வேளாங்கண்ணியில் வழிபாடு செய்த த.வெ.க. தொண்டர்

வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.

மிழகத்தில் த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே தான் போட்டி என த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார். அதைத்தொடர்ந்து கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் த.வெ.க. தொண்டர் ஒருவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என வேண்டிக்கொண்டு வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Latest news