Tuesday, February 17, 2026

‘விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தி’ – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வெளியிடும் கருத்துகள், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது: “காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டு இருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காகவே கூடுதல் சீட்கள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது அவசியம்.மக்கள் விஜய்யை நடிகராக பார்க்கவில்லை; அவர் அரசியல் சக்தியாக மாறிவிட்டார். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

Related News

Latest News