கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை தொடர்ந்து கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூர் சம்பவ வழக்கில் உச்சநீதிமன்றம், பிறப்பித்த உத்தரவுகள் பற்றி த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, வலி மிகுந்த பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். வாயில் இருந்து வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன. இது ஒரு நெருக்கடியான காலக்கட்டம் ஆகும்.
உச்சநீதிமன்றம் மூலம் சரியான தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. இதன்மூலம் உண்மையும், நீதியும் கிடைக்கும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்து எடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்களது வாழ்க்கை முழுவதும் த.வெ.க. பயணிக்கும் என்று அவர் கூறினார்.
