சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் யூடிபர் கிரண் புரூஷ் கரூர் தவெக பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக வீடியோவை பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கோகுல் என்பவர் கிரண் புரூஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கோயம்பேடு கே11 காவல்நிலையத்தில் கிரண் புரூஷ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தவெக நிர்வாகி கோகுலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் யூடியூபர் கிரண் புரூஷை தவெக நிர்வாகி கோகுல் மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.