வெங்காரம் என்றால் என்ன? அதை சாப்பிட்டால் மரணம் ஏற்படுமா?

மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி(19). பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக youtube ல் வீடியோ பார்த்துள்ளார். அப்போது ‘வெங்காரம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்’ என பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார்.

இதனை நம்பி நாட்டு மருந்து கடையில் வெங்காரம் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுப்போக்குடன் சேர்ந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி உள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.

வெங்காரம் என்றால் என்ன?

வெங்காரம் (Borax/ Borate) என்பது சோடியம் டெட்ராபோரேட் (Sodium Tetraborate) வெள்ளை நிறத்தில், கற்கண்டு போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு கனிம உப்பு. இது துவர்ப்பு சுவையுடையது, சோடியம் போரேட் என வேதியியல் ரீதியாக அழைக்கப்படுகிறது.

இது தங்கம் உருக்கவும், சில குறிப்பிட்ட மருத்துவ முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதாகும்.

வெங்காரம் உணவாக சாப்பிடுவது ஆபத்தானது. இது நச்சுத்தன்மை ஏற்படுத்தும். சிறிய அளவில் உட்கொண்டாலும் வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஏற்படும். அதிக அளவில் சிறுநீரக பாதிப்பு, மயக்கம், மரணம் வரை ஏற்படலாம்.

Related News

Latest News