கூலி திரைப்படம் முக்கியமா? அல்லது கூலி தொழிலாளர்கள் பிரச்சினை முக்கியமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூலி படத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மக்கள் பிரச்சனை குறித்து பேசும் எனது செய்தியாளர் சந்திப்புக்கு ஊடக நிறுவனங்கள் வழங்கவில்லை என ஆதங்கமாக தெரிவித்தார்.
கூலி திரைப்படம் முக்கியமா? இல்லை கூலித் தொழிலாளர்கள் பிரச்சினை முக்கியமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி செம்மணி மனிதப் புதைகுழி, தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வருகையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
வட மாநிலத்தவர்களின் வருகை அதிகரிப்பாலும் அவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதாலும் தமிழர்களின் உரிமை மற்றும் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.