மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காக பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செல்ல முயன்ற போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் நவாஸ் கனியின் புகைப்படத்தை காலணியால் அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பின்னர் வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கோரி பாஜகவினர் போல்சிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.