தாம்பரம் – வண்டலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. அப்போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் பேருந்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சென்றது.
அதே சமயம் எதிர் திசையில் மெதுவாக வந்த கார் மீதும் பின்னால் வந்த கார் மோதியது. ஒரே நேரத்தில் வாகனங்கள் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.