அடிச்சான் பாரு ‘வாரிசு’….அடுத்த‌ பாட்டு இன்னைக்கு ரிலீஸ்!

235
Advertisement

விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ பொங்கலுக்கு திரையரங்குகளில் மோத உள்ள நிலையில், இரு படத்தில் இருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி போட்டி போட்டு வருகின்றன.

வாரிசு படத்தில் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, தங்கள் அபிமான நட்சத்திரங்களின் பாடல்களை இருதரப்பு ரசிகர்களும்  சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இரு படங்களில் இருந்து இரு பாடல்கள் ரிலீஸ் என்ற சமநிலை நேற்றைக்கு முன்தினம் தான் எட்டப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக புதிய பாடலை வெளியிட முடிவு செய்துள்ளது ‘வாரிசு’ படக்குழு.

Soul of Varisu என குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டர்களுடன்‌ இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அம்மா சென்டிமென்ட்டை மையமாக கொண்ட இந்தப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.