எல்லா pressure என் மேல தான்! ‘வாரிசு’ இசையமைப்பாளர் திடீர் ட்வீட்

241
Advertisement

வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து, ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால், முதல் முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ள தமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தனித்துவமான நடன அசைவுகள் கொண்ட  அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா மற்றும் மேகம் கருக்காதா பாடலுக்கு choreographer ஆக இருந்த ஜானி மாஸ்டர் தான் வாரிசு படத்தின் நடன இயக்குனர் என்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்பட்ட நிலையில், ரஞ்சிதமே பாடலில் விஜய் போட்ட கடினமான dance steps தமன், விஜய் மற்றும் ஜானி மாஸ்டர் கூட்டணியை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் பெல்லாரியில் ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்த ஜானி மாஸ்டர் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை quote செய்த தமன், ஜானி மாஸ்டர் இவ்வாறு தன் மீது எல்லா pressureஐயும் போட்டு விட்டதாக நகைச்சுவையாக பதிவிட்டது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.