வந்தாச்சு பயோனிக் கண்
பார்வையற்றவர்களுக்கு ஒரு பரவசச் செய்தி

308
Advertisement

உடலுறுப்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இயங்கினாலும்
கண் பார்வை இல்லாமலிருந்தால்……அந்த வாழ்க்கை
எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க
முடியாது. பார்வையற்றவர்களின் இந்தத் துயரத்தைப்
போக்குவதற்கு வந்துவிட்டது பயோனிக் கண்.

உலகம் முழுவதும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமானோர்
கண் பார்வையின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு
விடிவெள்ளியாக அமைந்துள்ளது பயோனிக் கண். பிறவியிலேயே
கண் பார்வை இல்லாதவர்களும் பயோனிக் கண் பொருத்திப்
பார்வை பெறலாம் என்பது உவகை தரும் செய்தியாகும்.

ஆஸ்திரேலியப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இந்த
மாபெரும் சாதனையைப் புரிந்துள்ளனர்.

எலக்ட்ரானிக் மற்றும் மென்பொருளால் இந்த பயோனிக் கண்
உருவாக்கப்பட்டுள்ளது. பயோனிக் கண் என்பதற்கு செயற்கை
உடலுறுப்பு என அர்த்தம்.

அறுவை சிகிச்சைமூலம் இந்த பயோனிக் கண் பொருத்தப்படுகிறது.
அதிவேகமாக காட்சிகளைப் படமாக்கும் 500 பிக்சல்களைக்கொண்ட
நவீன கேமரா, படமாக்கப்பட்ட புகைப்படங்களை திறன்பட மூளைக்குப்
பரிமாற்றம் செய்ய சிப்செட்டுகள் மற்றும் காட்சியை மூளைக்கு அனுப்பி
பிம்பமாக்கி பார்வையை வழங்கும் அதிநவீனக் கண்ணாடிகள்
உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இடைக்காலத்தில் முற்றிலும் பார்வை
பறிபோனவர்களுக்கு பார்வை வழங்க இந்த பயோனிக் கண் உதவுகிறது.

1983 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசிய மருத்துவர் ஜோவோ லோபோ
ஆன்டியூன்ஸ் பயோனிக் கண் பொருத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.
அதன்பின் பல்வேறு மாற்றங்களுடன் பயோனிக் கண் சிறப்பானதான
உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த முழுமையான கண்ணை உருவாக்கியுள்ளவர் பாகிஸ்தான்
அமெரிக்கரான மார்க் சல்மான் ஹூமாயூன். பாக்கிஸ்தான் தந்தைக்கும்
(முகமது ஹுமாயூன்) பாகிஸ்தானில் பிறந்த இவர் 1972 ஆம் ஆண்டு
அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கேயே டக் பல்கலைக் கழகத்தில் எம்டி பட்டம் பெற்றார்.
இவரின் பெற்றோர் பாக்கிஸ்தான் அதிபராக இருந்த ஜின்னாவின்
குடும்ப மருத்துவர்கள்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி,
நெதர்லாந்து, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த
பயோனிக் கண்ணைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

செகண்ட் சைட் அதாவது, இரண்டாம் பார்வை எனப்படும் இந்த
பயோனிக் கண் ஒன்றின் விலை சுமார் ஒன்றரை லட்சம் அமெரிக்க
டாலர் என்று கூறப்படுகிறது.