“அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” – வைகோ

410

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, வான்படைக்கு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகிற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும் என்று கூறியுள்ளார்.

4 ஆண்டு படைப்பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகி விடும் என்று கூறியுள்ள வைகோ, இந்த திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள வைகோ, அக்னிபத்’ திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.