ஐபிஎல் 2026 தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி கொல்கத்தா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், மைதானத்தில் நிகழ்ந்த ஒரு உணர்ச்சி மிகுந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, போட்டி முடிந்ததும் பவுண்டரி லைன் அருகே தனியாக அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார். இந்த காட்சி ரசிகர்களின் இதயத்தை உருக்கியது. தனது அணியின் தோல்வியை மனதில் கொண்டு சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் உடைந்து போனார். இதைக் கண்ட கொல்கத்தா அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் சென்று அவரை ஆறுதல் கூறிய தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பதிலுக்கு விளையாடிய கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் அரைசதம் அடித்து 53 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 19.4 ஓவர்களில் இலக்கை எட்டிய KKR, முக்கியமான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், வைபவ் சூர்யவன்ஷியின் தைரியமான 46 ரன்கள் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை வெளிப்படுத்தியது.
