19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் பிரிஸ்பேனில் உள்ள இயான் ஹீலி ஓவலில் நேற்று ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கும் இந்தியா அண்டர்-19 அணிக்கும் இடையிலான முதல் யூத் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 பந்தில் 113 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.