Sunday, August 31, 2025

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து : நதியில் விழுந்த வாகனங்கள்

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இன்று (ஜூலை 9, 2025) காலை சுமார் 7:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த 4 வாகனங்கள் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), தீயணைப்பு மற்றும் போலீஸ் படையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News