அமெரிக்காவை சேர்ந்த பிரிட்னி ஆல்பா என்ற பெண், இரட்டை குழந்தைகளை பெற்ற பதிமூன்றே மாதங்களில் மீண்டும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
லூக்கா, லேவி என்ற இரட்டை குழந்தைகளை பெற்ற ஆறாவது மாதத்திலேயே தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார் பிரிட்னி.
அதிக அபாயங்களுக்கு வாய்ப்பு இருப்பதால், கர்ப்ப காலத்தின் 25வது வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 32வது வாரம் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் லிடியா, லின்லீ எனும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் தேதி இக்குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இதைப் பற்றிய அறிக்கையை பிர்மிங்காம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஓராண்டுக்குள் மீண்டும் கருவுற்று இரட்டையர்கள் பிறப்பது அரிய நிகழ்வாகும். Momo Twins என அழைக்கப்படும் இவ்வகை இரட்டையர்கள் உலகில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே உள்ளதாக குறிப்பிடும் மருத்துவர்கள், இப்படி உருவாகும் குழந்தைகள் பல சவால்களை தாண்டியே உயிர் பிழைக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.