டிரம்ப்பின் பிறப்புரிமை காலக்கெடுவால், அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண்கள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா குடிமக்கள் இல்லாத தம்பதிகள், தங்களின் குழந்தைகளை அமெரிக்காவில் பெற்றெடுத்தாலும், அவர்கள் அமெரிக்க குடிமக்களாக கருத முடியாது என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு பின்னர் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், 8 மற்றும் 9 மாத கர்ப்பிணி பெண்கள் பலர், தங்களின் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு முன் பெற்றெடுக்கும் வகையில் மருத்துவமனைகளை நோக்கி அமெரிக்காவில் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.