திருப்பூர் அருகே, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ வழக்கில்
கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த ஊதியூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வரும் சிவக்குமார் என்பவர் 6 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆசிரியர் சிவக்குமார் மீது காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியபோது, ஆசிரியர் சிவக்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து ஆசிரியர் சிவக்குமாரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.