மிரள வைக்கும் மேகப் பாலம்

108
Advertisement

பிரேசில் நாட்டில் உள்ள பெபே கடற்கரையில், அண்மையில் வித்தியாசமாக பாலம் போல காட்சியளிக்கும் மேகம் மிக அருகில் தோன்றி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது.

இந்த அரிய நிகழ்வின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rolling Cloud என அழைக்கப்படும் இவ்வகை மேகங்கள், வெப்பமான காற்றும் ஈரப்பதமும் இணையும் போது உருவாவதாக வானியல் நிபுணர்கள் விளக்குகின்றனர். காற்றின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, கடல் அலைகளில் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பிரேசில் கடற்படை எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

https://www.instagram.com/reel/Ch2SBEPua2R/?utm_source=ig_web_copy_link