உக்ரைனிலிருந்து 4.8 மில்லியன் குழந்தைகள் வெளியேறியுள்ளனர்-யுனிசெப்

239
Advertisement

கடந்த பிப்ரவரி 24 தேதி அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போரின் விளைவாக 7.5 மில்லியன் உக்ரைன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 142 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்று UNICEF (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கூறியுள்ளது.

ஐ.நா குழந்தைகள் நிறுவனம் மேலும், தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம் எனக் கூறுகிறது.

சமீபத்தில் உக்ரைனில் இருந்து திரும்பிய UNICEF இன் அவசரக்கால திட்ட இயக்குநர் மானுவல் ஃபோன்டைன் இது குறித்துக் கூறுகையில் ,

இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்ற சோகத்தை இந்த அளவில் பார்த்ததில்லை என தெரிவித்த அவர் “அவர்கள் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கூறினார்.மேலும் , அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்று குழந்தைகள் வருத்தப்படுகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

நேற்றைய நிலவரப்படி, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் ஆய்வு அறிக்கையின்படி , 142 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 229 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தெரிகிறது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும் என கூறினார்.

மற்றொரு தகவலின் படி உக்ரைனின் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, அனாதைகள் மற்றும் பெற்றோருடன் உள்ள 121,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷ்யா உக்ரைனில் இருந்து அழைத்துச் சென்று ரஷ்யாவில் தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனின் இடம்பெயர்ந்த குழந்தைகளில் 2.8 மில்லியன் பேர் உக்ரைனில் இருப்பதாகவும், 2 மில்லியன் பேர் மற்ற நாடுகளில் இருப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், உக்ரைனில் இன்னும் தங்கள் வீடுகளில் உள்ள சுமார் 3.2 மில்லியன் குழந்தைகளில் பாதிப் பேர் “போதுமான உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர்” என்றும் மரியுபோல் போன்ற முற்றுகையிடப்பட்ட நகரங்களில் உள்ளவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிந்தார்.