உயிருடன் இருக்கும் உக்ரைனின் பாம்பு தீவு வீரர்கள் ?

569
Advertisement

ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் உக்ரைனின் பாம்பு தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் வீரர்கள் 13 பேரும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படை மும்முனை தாக்குதல் நடத்திவரும் நிலையில் ,அங்கு பதற்றமான சுழல் தொடர்கிறது.போரை நிறுத்த இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் , அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருகிறது இந்தியா .

ரஷ்யாவின் பெரும் படையை எதிர்த்து உக்கிரன் படை வீரர்கள் போராடிவருகின்றனர் மேலும் தாய் நாட்டிற்காக உக்கிரைன் மக்களும் போர் களத்தில் ஆயுதம் ஏந்தி உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில், கருங்கடலில் 40 ஏக்கர் பரப்பளவை கொண்ட பாம்புத் தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்த உக்ரைனின் 13 வீரர்களை குறிவைத்து ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய சொன்ன ரஷ்யா போர் கப்பல் கேப்டனை ….சரணடைய மறுத்து ,சிறுது கூட அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டினர்.

இதையடுத்து ரஷ்ய படை ,அந்த தீவில் இருந்த 13 பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,அதில் அந்த 13 வீரர்கள் வீரமரணமடைந்தாக அந்நாட்டு அரசும் தெரிவித்திருந்தது இந்நிலையில் அந்த 13 பேர் உயிருடன் இருப்பதாகவும், ரஷ்ய படி தாக்குதலை முறியடித்ததாகவும் , மேலும் தொடர்ந்து சண்டையிட ஆயுதங்கள் இல்லாததால் சரண் அடைந்ததாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

சரண் அடைந்த உக்ரைன் வீரர்களை ரஷிய படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதிக்குகொண்டு சென்று கைதிகளாக அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் தெருவித்துஉள்ளது .