காலத்தால் அழியாத காதல்

38
Advertisement

காலம், இடைவெளி, பிரிவு, இறப்பு என அனைத்து சவால்களையும் தாண்டி சில காதல் வாழ்வதால் தான், காதல் என்ற வார்த்தையே அர்த்தம் பெறுகிறது.

இறந்த தன் கணவரின் குரலை கேட்க, தினமும் ரயில் நிலையம் ஒன்றிற்கு சென்று வரும் மூதாட்டியின் கதை இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1992இல் திருமணம் செய்து கொண்ட மார்கரெட் ஆஸ்வால்ட் தம்பதியினர், 2007இல் ஆஸ்வால்டின் இறப்பு வரை இணைபிரியாமல் வாழ்ந்தனர்.

Advertisement

மருத்துவர் மார்கரெட்டின் கணவர் ஆஸ்வால்ட் குரலில் 1950களில் பதிவு செய்யப்பட்ட ‘Mind the Gap’ என்னும் எச்சரிக்கை வாசகம் இங்கிலாந்தின் அணைத்து ரயில் நிலையங்களிலும் ஒலித்து வந்தது.

கணவரின் இறப்புக்கு பின்னர், அவர் குரலை ரயில் நிலையங்களுக்கு சென்று கேட்டு வந்தார் மார்கரெட்.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் பல ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் டிஜிட்டல் மயமாகி விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மார்கரெட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தன் காதல் கதையை எடுத்து கூறியதை அடுத்து, மார்கரெட்டுக்கு ஆஸ்வால்டின் குரல் அடங்கிய CDயை அளித்தனர்.

மேலும், மார்கரெட்டின் உணர்வுபூர்வமான காதலை கௌரவிக்கும் வகையில் Embankment ரயில் நிலையத்தில் பழைய முறைப்படி ஆஸ்வால்ட் குரலில் அறிவிப்பை ஒலிக்க செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.