இனி உபரில் பேருந்து ,இரயில் மற்றும் விமானம் !

302
Advertisement

எந்த நேரத்திலும் நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் வாடகை கார் போக்குவரத்துக்கு சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று UBER.சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன இதுபோன்ற நிறுவனங்கள்.இந்நிலையில் Uber தற்போது தனது எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

உபரை “Super-app” ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் இனி ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானங்கள் ஆகிய முன்பதிவு சேவைகளை பெறமுடியம்.

முதல்கட்டமாக , இத்திட்டம் அமெரிக்காவில் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு “தடையில்லா டோர்-டு-டோர் அனுபவத்தை” வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக நிறுவனம் கூறுகிறது.

இந்த நிறுவனத்தை பொறுத்தவரை புதிய சேவைகளை அறிமுகம் செய்வது முதல்முறை அல்ல , ஆரம்பத்தில் உபர் தங்கள் சேவைகளிலிருந்து பைக்குகள் /ஸ்கூட்டர்கள் ,உணவு மற்றும் மளிகை விநியோகத்துடன் விரிவுபடுத்தியது.

நிறுவனத்தின் முந்தைய அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, நீண்ட பயணங்களுக்கான விமானம், ரயில் மற்றும் பேருந்து முன்பதிவுகளைத் தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆகாது என எதிர்பார்க்கப்படுகிறது.