சேலம் அருகே காரில் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் வீராணம் போலீசார், ஆச்சாங்குட்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டபோது, அந்த கார் எதிரே வந்த வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
பின்னர் அந்த கார் கொட்டச்செயடு பகுதியில் சரக்கு வாகனத்தின் மீது மோதி, பழுதாகி சாலையில் நின்றுள்ளது. இதையடுத்து அந்த காரில் இருந்த குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.