2019ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு HMPV வைரஸ் உருவாகியுள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் ஒரு குழந்தை, தமிழ்நாட்டில் சென்னையில் இரண்டு குழந்தை என ஒரே நாளில் 5 குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.