Tuesday, July 15, 2025

போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது : 500 மாத்திரைகள் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைக்காக பயன்படுத்தக்கூடிய உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வளசரவாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அம்பேத்கர் சாலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் (30) மற்றும் ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் (23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தக்கூடிய 500 உடல் வலி நிவாரண மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news