Friday, April 18, 2025

FIFA உலகக்கோப்பை முடிவுகளை 7 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்த நபர்!

கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா கோப்பையை தன்வசப்படுத்தியது.

கோப்பையை கைப்பற்றும் இறுதிப்போட்டிகளின் பரபரப்பு குறையாமல், வெற்றியை நிர்ணயிக்கும் penalty shootout கடைசிவரை கொடுத்த சஸ்பென்ஸ், கால்பந்து ரசிகர்களின் சுவாரஸ்யத்தை தக்க வைத்தது.

ஒருவழியாக, அர்ஜென்டினா கோப்பையை வெல்ல, ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரமான லயனல் மெஸ்ஸியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜோஸ் மிகுவேல் பொலான்கோ என்ற நபர் 2015ஆம் ஆண்டு ட்விட்டரில் பகிர்ந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி, 34 வயதான லயனல் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்று தலைசிறந்த வீரராக உருவெடுப்பார் எனவும் ஏழு வருடத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் என்றும் ஜோஸ் குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸிக்கு தற்போது 35 வயது என்பதால் அந்த ஒரு பிழையை தவிர இந்த பதிவு அப்படியே அரங்கேறியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்னதாக, உலகக்கோப்பை கால்பந்து முடிவுககளை கணிக்கும் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Latest news