இரட்டை சகோதரர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாகி சாதனை புரிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பு அதிகாரியான
அரவிந்தன் IPS அதிகாரி தனது சகோதரரும் ஐபிஎஸ் அதிகாரியாகி
உள்ளதை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
பி. அரவிந்தன் 2010 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.
தென்காசிக் காவல்துறைக் கண்காணிப்பாளராக முதன்முறையாகப்
பதவியேற்றபோது, ஊழல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக அதிகாரி வருகையின் தேதி, நேரம்
குறித்து விண்ணப்பதாரர்களை எச்சரிக்க எஸ்எம்எஸ் முறையை
அறிமுகப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தற்போது இவரது சகோதரர் அபிநந்தன் டெல்லிக் காவல்துறையில்
பயிற்சி உதவிக் காவல்துறை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இரட்டையர்களான இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகளாகிப் பெற்றோருக்குப்
பெருமை சேர்த்துள்ளதோடு, இரட்டையர்கள் உள்பட அனைவருக்கும்
முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
இரட்டையர்கள் இருவர் ஐபிஎஸ் அதிகாரிகளாகி இருப்பது இதுவே
முதன்முறை என்று கருதப்படுகிறது.