காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், 910வது நாளாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
அங்கு தவெக தலைவர் விஜய் பேசியதாவது : போராட்டத்தில் ஈடுபடும் உங்களுடன் தொடர்ந்து துணை நிற்பேன். பரந்தூர் மண்ணில் இருந்து எனது கள அரசியல் தொடங்குகிறது. விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கள அரசியலை தொடங்க நினைத்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என தோன்றியது.
மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. ஏர்போர்ட் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறோம் என அவர் பேசியுள்ளார்.