ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வின் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் உண்மை இல்லையெனில் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும், சட்டம்-ஒழுங்க்லு சீர்கெட்டு விட்டது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மடியில் கனம் இருப்பதால், மக்கள் பிரச்சனையை அதிமுக கையில் எடுக்காமல் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
அதிமுக-வை மீட்பதே தங்களின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.